BREAKING NEWS

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் –  மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.


 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விலை உயர்வு

பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி, அரசு கஜானாவை நிரப்புவதில் தான் அக்கறை காட்டப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.73.69 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.81.22 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும்.

திரும்ப பெற வேண்டும்

பா.ஜ.க. ஆட்சியில் கலால் வரி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 13.47 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.11.77 ஆகவும் உயர்த்தப்பட்டு கிட்டத்தட்ட ரூபாய் 10 லட்சம் கோடி வருமானத்தை பா.ஜ.க. பெருக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய வரிவிதிப்பின் காரணமாகவே, பெரும் சுமையை மக்கள் ஏற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இதை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply