தற்போதைய செய்திகள்

புறநகர் மின்ரெயில் சேவையில் மாற்றம்

புறநகர் மின்ரெயில் சேவையில் மாற்றம்
திருநின்றவூரில் பராமரிப்பு பணி காரணமாக
சென்னை.திருநின்றவூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 16-ந்தேதி வரை 4 நாட்களுக்கு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்க ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநின்றவூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நேற்று (சனிக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை 5 நாட்கள் மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 12.15 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு 1.20 மணி மின்சார ரெயில்கள் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவு பாதையில் செல்லும். இதனால் சில ரெயில் நிலையங்களில் நிற்காது.

புறநகர் மின்சார ரெயில்

மே 12, 13, 14-ந் தேதிகளில் மூர்மார்க்கெட்- சூலூர்பேட்டை காலை 7.30, 8.15 மணி ரெயில்கள் மூர்மார்க்கெட்- எலாவூர் இடையேயும், சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் காலை 10, 11.15 மணி ரெயில்கள் எலாவூர்-மூர்மார்க்கெட் இடையேயும் இயக்கப்படும். மே 12, 13, 19, 20-ந் தேதிகளில் சென்டிரல்-விஜயவாடா பினாங்கினி எக்ஸ்பிரஸ் (12712) ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

விஜயவாடா தாமதம்

விஜயவாடா-சென்ட்ரல் பினாங்கினி எக்ஸ்பிரஸ் (12711) ஒரு மணி 20 நிமிடம் தாமதமாக வந்துசேரும். மூர்மார்க்கெட்-ஆவடி பகல் 2.05, ஆவடி-மூர்மார்க்கெட் 2.50 மணி ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 மற்றும் 20-ந் தேதிகளில் சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் பகல் 12 மணி ரெயில் ஒரு மணி 30 நிமிடம் தாமதமாக புறப்படும்.

இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.




Leave a Reply