BREAKING NEWS

புத்தம் புதிய அம்சங்களுடன் 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம்

ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வில் புத்தம் புதிய அம்சங்கள் நிறைந்த 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம் செய்யப்பட்டன.

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் கேமிங், டி.வி. பிளஸ் சேவைகளுடன் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்தது. இரு சாதனங்களிலும் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐபேட் 10.2 இன்ச் சிறப்பம்சங்கள்:

10.2 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் மல்டி-டச் டிஸ்ப்ளே

ஆப்பிள் ஏ10 பியூஷன் சிப்செட்

ஆப்பிள் பென்சில் வசதி (முதல் தலைமுறை மாடல்)

8 எம்.பி. கேமரா, f/2.4

1.2 எம்.பி. கேமரா, f/2.2

வைபை, ப்ளூடூத், டூயல் மைக்ரோபோன்

32.4 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி

ஐபேட் ஒ.எஸ்.

புதிய ஐபேட் 10.2 இன்ச் 32 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ.29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ.40,900 முதல் துவங்குகிறது. புதிய ஐபேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.




Leave a Reply