BREAKING NEWS

புதிய நிறத்தில் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 இந்தியாவில் அறிமுகம்

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரை புதிதாக மேட் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேட் பிளாக் நிறம் கொண்ட பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடல் விலை ரூ. 69,208 (எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய நிறம் தவிர பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரில் 124.3 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.5 பி.ஹெச்.பி பவர் மற்றும் 10.2 என்.எம். டார்கியூ செயல்திறன் வெளிப்படுத்தக்கூடியது.

சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டரில் அதிக இட வசதி கொண்ட ஸ்டோரேஜ், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட், டியூப்லெஸ் டையர் மற்றும் எல்.இ.டி. டெயில்லேம்ப் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10.5 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன் யூனிட்ஐ பொருத்த வரை முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் ஹைட்ராலிக் சிங்கிள் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடல்: மெட்டாலிக் மேட் ஃபேப்ரியான், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் பியல் மிரேக் வைட் நிறங்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் புதிய மேட் பிளாக் நிறமும் சேர்ந்திருக்கிறது.




Leave a Reply