BREAKING NEWS

புதிய சிமெண்ட் தொழிற்சாலையை, முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

அரியலூரில் ரூ.809 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய விரிவாக்கப்பட்ட சிமெண்ட் தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம், தினசரி 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட உள்ளது. சிமெண்ட் தொழிற்சாலை கடந்த 2011-12ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட் ஆலையின் உற்பத்தி திறனை 5 லட்சம் டன்னிலிருந்து 15 லட்சம் டன்னாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, ஜெயலலிதா 2016-ல் அரியலூர் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன வளாகத்தில் சிமெண்ட் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலை விரிவாக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 10 லட்சம் டன்டெவலப்மெண்ட் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட், கொல்கத்தா என்ற நிறுவனத்தை திட்ட மேலாண்மை ஆலோசகராகவும், கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள லார்சன் அன்டு டியூப்ரோ என்ற நிறுவனத்தை ஒப்பந்ததாரராகவும் கொண்டு ஆலை நிறுவும் பணி துவக்கப்பட்டது.

அதன்படி, அரியலூர், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன வளாகத்தில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். ரூ.809 கோடி மதிப்பீடு இப்புதிய விரிவாக்கம் செய்யப்பட்ட தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்களை மேற்கொண்டும், சுற்றுச்சூழல் இயந்திரங்களை நிறுவியும், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிகளை முழுமையாக பின்பற்றியும் நிறுவப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில், 2020-21-ம் ஆண்டு முதல் ஆண்டொன்றிற்கு 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இதன்மூலம் டான்செம் நிறுவனத்தின் மொத்த சிமெண்ட் உற்பத்தி திறன் தற்போது உள்ள 7 லட்சம் டன்னிலிருந்து 17 லட்சம் டன்னாக உயரும். இந்த ஆலை 809 கோடியே 9 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 250 நபர்கள் நேரடியாகவும் 1,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.பணி நியமன ஆணைமேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக, தெரிவு செய்யப்பட்ட 3 இயந்திர பொறியியல் தொழில்நுட்ப நிர்வாகிகள், 4 மத்திய கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டர்கள், 2 வேதியியலாளர்கள், 1 எக்ஸ்ரே ஆய்வாளர், 1 கணக்காளர், 2 வாகன ஓட்டுநர்கள் ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் அரியலூர் சிமெண்ட் ஆலை ஆகியவற்றிற்கு சிறந்த தர மேலாண்மை முறைக்காக இந்திய தர நிர்ணய அமைப்பால் வழங்கப்பட்ட ஐ.எஸ்.ஓ.– சான்றிதழ்களை முதலமைச்சரிடம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் காண்பித்து வாழ்த்து பெற்றார். —————————-1,100 ேகாடி மதிப்பிலான காகித ஆலை (பாக்ஸ்)உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, திருச்சி, மணப்பாறை, மொண்டிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் அடுக்கு காகித அட்டை ஆலையின் விரிவாக்க திட்டத்தின் முதல்கட்டமாக 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தினசரி 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட வன்மரக்கூழ் தயாரிக்கும் பிரிவு, இரசாயன மீட்பு கொதிகலன் பிரிவு மற்றும் 20 மெகா வாட் திறன் கொண்ட மின்னாக்கி நிறுவுதல் ஆகிய பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த ஆலை விரிவாக்க திட்டம் மொத்தம் 2,520 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2018-19ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 18 கோடியே 33,36,750 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை முதலமைச்சரிடம் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்கள்.மேலும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் `மை ஸ்டாம்ப்’ என்ற தபால் தலையை முதலமைச்சர் இன்று வெளியிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *