BREAKING NEWS

புதிதாக பிறந்துள்ள பாண்டா கரடி குட்டிக்கு “குயூகிங்” என்ற பெயர் சூட்டப்பட்டது

தேசிய தின கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் சீனாவில் புதிதாக பிறந்துள்ள பாண்டா கரடி குட்டிக்கு, ‘குயூகிங்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சீனாவின் தெற்கு மாகாணமான குயாங்டாங்கில் உள்ள விலங்கியல் பூங்காவில், கடந்த செப்டம்பர் 30-ம் பாண்டா கரடி குட்டி பிறந்தது. சீனாவின் மிகப்பெரிய வளமாக பாண்டா கரடிகள் கருதப்படுகிறது.

இந்தநிலையில், தேசிய தினத்தின் முந்தைய தினம் புதிய பாண்டா கரடி பிறந்ததால் அந்த குட்டிக்கு, தேசிய தின கொண்டாட்டத்தை கவுரவிக்கும் விதமாக ‘குயூகிங்’ என பெயர் வழங்கப்பட்டுள்ளது.

குயூகிங் என்றால் தேசிய கொண்டாட்டம் என்று அர்த்தம் என கூறும் பூங்கா அதிகாரிகள், பாண்டா குட்டியை அதன் தாய் அருகிலேயே இருக்க வைத்து பராமரித்து வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *