பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி முன்பதிவு துவங்கியது

ஹோண்டா விற்பனையாளர்கள் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹோண்டா விற்பனையாளர்களில் சிலர் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளன. இதன் விலை விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சில விற்பனையாளர்கள் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடல் டிசம்பர் மாத வாக்கில் விநியோகம் செய்யப்படலாம் என தெரிவித்து இருக்கின்றன.

முன்னதாக வெளியான தகவல்களில் பி.எஸ். 6 சிட்டி மாடலில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் பிஎஸ். 4 வெர்ஷனை போன்று 119 ஹெச்.பி. திறன் வழங்கும் என கூறப்படுகிறது. ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 பெட்ரோல் மாடல் விலை பி.எஸ். 4 மாடலை விட ரூ.35,000 முதல் ரூ.40,000 அதிகமாக இருக்கும்.

ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 மாடலில் டூயல் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 15இன்ச் அலாய் வீல், ரிமோட் லாக்கிங், பவர் விங் மிரர் மற்றும் விண்டோக், ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனர், ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் முதற்கட்டமாக தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2020 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *