BREAKING NEWS

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 3500 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.

 

 

பிராட்பேன்ட் சலுகைகள்

பி.எஸ்.என்.எல். நிறுவன பைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள, அந்த வகையில் புதிய சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி பி.எஸ்.என்.எல். நிறுவனம் கூடுதல் டேட்டா மட்டுமின்றி டவுன்லோடு வேகத்தையும் அதிகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளின் விலை ரூ.3,999 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ.16,999 வரை நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல் துவங்கியது, பி.எஸ்.என்.எல். பயனர்கள் பைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட்: ரூ.3,999, ரூ.5,999, ரூ.9,999 மற்றும் ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகைகளை தேர்வு செய்வோர் கூடுதல் வேகம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மாதாந்திர டேட்டா பெற முடியும்.

வேகம் அதிகரிப்பு

ரூ.3,999 சலுகையில் டவுன்லோடு வேகம் 60 எம்.பி.பி.எஸ் ஆகவும், மாதாந்திர டேட்டா அளவு 750 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சலுகையில் 50 எம்.பி.பி.எஸ் டேட்டா டவுன்லோடு வேகம் மற்றும் அதிகபட்சம் 500 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. ரூ.5,999 சலுகையில் தற்சமயம் 70 எம்.பி.பி.எஸ் டேட்டா வேகம் மற்றும் அதிகபட்சம் 1250 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. அதன்பின் டேட்டா வேகம் 6 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படுகிறது.

மாற்றப்பட்ட ரூ.9,999 விலையில் 100 எம்.பி.பி.எஸ் வேகம் மற்றும் 2250 ஜி.பி. டேட்டாவும், நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 8 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகையில் 100 எம்.பி.பி.எஸ் டவுன்லோடு வேகத்தில் அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதே சலுகையில் முன்னதாக 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 3000 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது.




Leave a Reply