தற்போதைய செய்திகள்

பிளஸ்2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு

பிளஸ்2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு


சென்னை, மே 16-

பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது.

நேற்று காலை நிருபர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், மணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார். அதன் விவரங்கள் வருமாறு:-

தேர்ச்சி விகிதம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் ஒரு சதவிதம் குறைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1 சதவீதம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக இயற்பியல் பாடத்தில் 96.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியல்-95 சதவீதம், உயிரியல்-96.3 சதவீதம், கணிதம்-96.1 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாவரவியல்-93.9 சதவீதம், விலங்கியல்-91.9 சதவீதம், கணினி அறிவியல்-96.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல்-90.3 சதவீதம், கணக்குப்பதிவியல்-91 சதவீதம்மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள்

71 ஆயிரத்து 368 மாணவ,மாணவிகள் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 1 லட்சத்து 7 ஆயிரத்து 266 மாணவ,மாணவிகள் 901-1000 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 1 லட்சத்து 65 ஆயிரத்து 425 மாணவ,மாணவிகள் 701 முதல் 800 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 1180 மதிப்பெண்களுக்கு மேல் 231 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

1151 முதல் 1180 வரை மதிப்பெண்களை 4 ஆயிரத்து 847 மாணவர்களும், 1126 முதல் 1150 வரை மதிப்பெண்களை 8 ஆயிரத்து 510 மாணவர்களும், 1101 முதல் 1125 வரை மதிப்பெண்களை 11 ஆயிரத்து 739 மாணவர்களும், 1001 முதல் 1100 வரை மதிப்பெண்களை 71 ஆயிரத்து 368 மாணவர்களும், 901 முதல் 1000 வரை மதிப்பெண்களை 1 லட்சத்து 7 அயிரத்து 266 மாணவர்களும், 801 முதல் 900 வரை மதிப்பெண்களை 1 லட்சத்து 43 ஆயிரத்து 110 மாணவர்களும், 701 முதல் 800 வரை மதிப்பெண்களை 1 லட்சத்து 65 ஆயிரத்து 425 மாணவர்களும், 700-க்கும் குறைவாக மதிப்பெண்களை 3 லட்சத்து 47 ஆயிரத்து 938 மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Leave a Reply