தற்போதைய செய்திகள்

பிறை தெரிந்தது ரமலான் நோன்பு ஆரம்பம்: தலைமை காஜி அறிவிப்பு

பிறை தெரிந்தது  ரமலான் நோன்பு ஆரம்பம்: தலைமை காஜி அறிவிப்பு
சென்னை

இஸ்லாமியர்களின் ஐம்பெரும்கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது. பிறை தெரிந்ததால் இன்றிரவு முதல் சஹர் வைத்து நோன்பை தொடங்குகின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய கடமையான நோன்பு. இது ரமலான் மாதத்தில் துவங்கும். 30 நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் என்பது மதம் அல்ல அது மார்க்கம் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பிருத்தலை பெரிய கடமையாக கருதி அனைவரும் கடைபிடிப்பார்கள்.

நோன்பு மட்டுமல்ல நோன்பு மாதத்தில் ஸக்காத் எனப்படும் ஏழைகளுக்கு உதவி செய்வதும் ஒரு கடமையாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது ஆண்டு வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை, வறுமை நிலையில் உள்ள முஸ்லிம்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதாகும்.

இஸ்லாமிய மாதங்களில் எட்டாவது மாதமான ரமலான் மாதத்தின் ஓர் இரவில் தான் புனித நூலான குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்டதாக நம்பிக்கை உண்டு. ஆகவே அந்த மாதம் நோன்பு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. செல்வம் படைத்தவர்களும் பசி மற்றும் பட்டினி குறித்து அறிந்து கொள்ள வேண்டும், உணவு கிடைக்காதவர்களின் நிலையை உணர வேண்டும் என்பதற்காகவே நோன்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

30 நாட்களும் 5 வேலை தொழுகைத்தவிர சிறப்புத் தொழுகையாக தராவிஹ் தொழப்படும். பின்னர் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்னே சஹர் என அழைக்கப்படும் உணவை உண்டபின் நோன்பு வைக்க துவங்குவார்கள். அதுமுதல் மாலை 6-30 மணி மஹ்ரிப் தொழுகை வரை தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பிருப்பார்கள். பின்னர் நோன்பை முடித்து உணவருந்துவார்கள். 30 நாட்கள் நோன்பின் முடிவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

ரமலான் மாதத்தின் 27-ம் நாள் சிறப்பு வாய்ந்தது. லைலத்துல் கத்ர் எனப்படும் குரான் வசனங்கள் இறக்கப்பட்ட முக்கியமான நாளாக அதை கடைபிடிக்கிறார்கள். அன்றும் வசதி உள்ள இஸ்லாமியர்கள் புதுத்துணி அணிந்து தராவிஹ் தொழுகைக்கு செல்வார்கள். மற்ற மாதங்களில் 5 வேலை தொழுகை இந்த மாதம் மட்டும் ஆறுவேலை தொழுகையாக கடைபிடிக்கப்படும்.
Leave a Reply