BREAKING NEWS

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு விஜயகாந்த் நன்றி.


 

விஜயகாந்த் நன்றி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினர். அவருக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது பிறந்த நாளுக்கு என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருமாவளவன், ஷேக்தாவுத், தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரையுலக நண்பர்கள், பட விநியோகஸ்தர்கள், தே.மு.தி.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் மற்றும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

                             \\

\




Leave a Reply