BREAKING NEWS

பிரேசில் மருத்துவமனையில் தீ விபத்து

பிரேசில் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் நோயாளி ஒருவர் உயிரிழந்தார்.

அந்நாட்டின் தலைநகர் ரியோ டீ ஜெனிரோவில் உள்ள பாடிம் என்ற மருத்துவமனை அருகேவுள்ள கட்டிடத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது. தீ வேகமாக எரிந்ததால் மருத்துவமனைக்கும் பரவிய நிலையில், அதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து நோயாளிகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கொழுந்து விட்டு எரிந்த தீ காரணமாக மருத்துவமனையில் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து மூச்சுத்திணறலால் நோயாளிகள் உயிரிழப்பதை தவிர்க்க மருத்துவர்கள் தீயணைப்பு துறை வாகனத்தின் உதவியுடன் அறை ஜன்னல் வழியாக நோயாளிகளை படுக்கையுடன் வெளியேற்றினர்.

மேலும் தீக்காயம் அடைந்த நோயாளிகளுக்கு, மருத்துவமனை வெளியிலேயே தற்காலிக கூடாரம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினரின் பல மணி நேர போராட்டத்துக்கு பின், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார், தீ அருகிலிருந்த கட்டிடத்திலிருந்து பரவியதா அல்லது மருத்துவமனையில் ஏற்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.




Leave a Reply