BREAKING NEWS

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ராட்சத பலூன் திருவிழா வானை முட்டும் அளவிற்கு பறந்த பலூன்கள்


பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ராட்சத பலூன் திருவிழாவில் புதிய உலக சாதனை படைக்க நினைத்த முயற்சி தோல்வி அடைந்தது.

பிரான்ஸ் நாட்டில் இரு ஆணடுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் ராட்சத ஹாட் பலூன் திருவிழா கடந்த வாரம் மெட்ஸ் நகரில் தொடங்கியது. இதனை முன்னிட்டு பலர் வானில் பல வண்ணமிகு ராட்சத பலூன்களை பறக்கவிட்டனர். இத்திருவிழாவில் கடந்த ஆண்டு ஒரு மணி நேரம் நேரத்திற்குள்ளாக 456 பலூன்களை பறக்கவிடப்பட்டது உலக சாதனையாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு சுமார் 500 பலூன்களை பறக்கவிட்டு புதிய உலக சாதனை படைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரு மணிநேரத்தில் 456 பலூன்கள் மட்டுமே பறக்கவி்டப்பட்டதால் புதிய சாதனை முயற்சி தோல்வி அடைந்தது.

இருப்பினும் ஒரே மணி நேரத்தில் 400க்கும் மேற்பட்ட பலூன்கள் வானில் பறந்ததை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். இந்நிலையில் வானத்தை முட்டும் அளவிற்கு பலூன்கள் பறந்து சென்றது பார்வையாளர்களை மகிழ வைத்தது.




Leave a Reply