BREAKING NEWS

பிரான்சில் சுட்டெரிக்கும் வெயிலில் பற்றி எரியும் சாலையோர மரங்கள்

பிரான்சில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சாலையோர மரங்கள் வெயிலில் தீப்பற்றி எரிகிறது.

பிரான்ஸ், பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அனல் காற்று வீசி வருகிறது. அதிகரித்து வரும் வெப்பத்தை எதிர்கொள்ள மக்கள் நீர்நிலைகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். மேலும், அனல் காற்று வீசுவதால் வனப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தீப்பற்றி எரிகிறது.

பிரான்ஸில் 500 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தீயில் கருகின. தீயை அணைக்க செல்லும் தீயணைப்பு துறையினரும் தீக்காயமடைகின்றனர்.

இதனால் விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்ய செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மோன்ட்பெல்லியர் பகுதி சாலையோரம் உள்ள மரங்கள் வெப்பத்தில் தானாக பற்றி எரிகின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், வாகனங்களை ஓரங்கட்டி மெதுவாக செல்கின்றனர்.




Leave a Reply