தற்போதைய செய்திகள்

தி.மு.க.வில் மாற்றங்களை ஏற்படுத்த ஸ்டாலின் அதிரடி முடிவு…!

 

என்னப்பா….! கண்டிப்பா.. அதிரடி மாற்றங்கள் இன்னும் கொஞ்ச நாள்ல இருக்கும்னு பேசிக்குறாங்கப்பா…! என்று கேட்டுக்கொண்டே பிரஸ்கிளப்புக்குள் நுழைந்தார் கபாலி. என்னவே…! எங்க அதிரடி மாற்றங்கள் இருக்கும்னு சொல்லுவே…! என்று ஆர்வமாக கேட்டார் மீரான். ஒண்ணுமில்லப்பா..! தி.மு.க.வுல உள்கட்சி பூசலை இல்லாம பண்ணனும்னு ஸ்டாலின் கள ஆய்வுக்கூட்டத்தை நடத்தினாருப்பா..! அதுமட்டுமில்லமா… புகார் கடிதங்கள் மூலமா நிர்வாகிகள் குறைகளை தெரிஞ்சுகிட்டாருப்பா…..!தொடர்ச்சியாக பத்து வருஷமா ஆட்சியில இல்லாத காரணத்தால….! மூத்த நிர்வாகிகள் உள்பட பலரும் ரொம்ப அதிருப்தியான செயல்பாடுகளை மேற்கொண்டுகிட்டு வர்றாங்கப்பா..! அதுவும்… கூட்டுறவு சங்கத் தேர்தல்ல கட்சி நிர்வாகிகளோட செயல்பாடுகள் ரொம்பவே வருத்ததை உண்டுபண்ணிடுச்சுப்பா..! காவிரி போராட்டத்துல ஸ்டாலின் தீவிரமா இருக்கதால…. அந்த போராட்டங்கள் முடிஞ்சதுக்கு அப்புறம்…! இன்னும் ஒரு ஆறு மாச காலத்துல… கட்சியில பல அதிரடி மாற்றங்களையும், நிர்வாகிகள் நியமனத்துலயும் மாற்றத்தை கொண்டு வரனும்னு ஸ்டாலின் முடிவு பண்ணிருக்காருப்பா…! என்றார் மன்னாரு.என்னண்ணே…! அரசியல்ல தீவிரமா இறங்குறதுக்கு தயாராகிட்டாரு போலண்ணே..? என்றார் மன்னாரு. யாருண்ணா…? என்று கேட்டார் டேவிட். வேற யாருமில்லண்ணே…! எல்லாம் நம்ம வேங்கையன் மவன்தான்ணே….! கட்சி தொடங்க போறேன்னு மட்டும் சொல்லிட்டு… ரஜினி அடுத்த ரெண்டு மாசத்துக்கு அப்படியே அமைதியா இருந்துட்டாருண்ணே…! ஆனா.. தனியார் கல்லூரி விழாவுல தன்மேல இருக்குற விமர்சனத்துக்கு பதில் தந்தாருண்ணே…! இப்போ.. அமெரிக்கா போயிட்டு வந்ததுக்கு அப்புறம் தன்னோட கட்சிப் பணிகளை தீவிரப்படுத்திருக்காருண்ணே…!

அதுவும்…! காலா இசை வெளியிட்டு விழாவுல அவர் கட்சிப் பற்றி எதுவுமே பேசலனு அவரோட ரசிகர்களுக்கு வருத்தம்தான்…! ஆனா… அவர் மன்ற நிர்வாகிகள் நியமனம், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துறதுனு ரொம்பவே தீவிரமா இறங்கிட்டாருண்ணே…! இந்த நிலைமையில… மன்ற நிர்வாகிகளுக்கு போன வாரம் தன்னோட வீட்டுல ஆலோசனை வழங்கிருக்காருண்ணே…! இந்த நிலைமையில.. தன்னோட மன்றத்தோட அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து.. அவங்களோட அடுத்த கட்ட பணிகளை இன்னைக்கு விரிவாக அவங்களுக்கு சொல்ல போறாருண்ணே..! என்றார் மன்னாரு.

என்னவே…! கலந்தாய்வு கொடுக்க முடிவு பண்ணிருக்காங்கவே…? என்று கேட்டார் மீரான். யாருக்குண்ணே…! கலந்தாய்வு கொடுக்க போறாங்கண்ேண..? என்று கேட்டார் மன்னாரு. ஒண்ணுமில்லவே…! நாட்டுல இப்போ கொஞ்ச காலமா பாலியல் தொல்லைகள் அளவுக்கதிகமாகவே நடந்துகிட்டு இருக்குதுவே…! அதுவும்… குறிப்பா… பள்ளிக்குழந்தைகள், மாணவிகள்னு நிறைய பேருக்கு பாலியல் தொல்ைலகள் அவங்களோட ஆசிரியர்கள் மூலமாவே நடக்குதுவே…! இந்த சம்பவம் கடந்த சில காலமாவே அதிகரிச்சுருக்குதுவே..! தமிழ்நாட்டுல பேராசிரியை நிர்மலாதேவி சம்பவம் இதுக்கு ஒரு நல்ல உதாரணம்வே..!

இது அரசாங்கத்தையும், கல்வித்துறையையும் ரொம்பவே வருத்தப்பட வச்சுருச்சாவே…! அதுனால.. பள்ளி, கல்லூரிகள்ல பயில்ற ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அளிக்க அரசு சார்பில முடிவு பண்ணிருக்காங்கவே…! அதுல மாணவர்களை எப்படி கையாளனும்… அவங்களை எப்படி பாலியல் தொல்லைகள்ல இருந்து பாதுகாக்குறது…! குழந்தைகளுக்கு எப்படி அதைப் பற்றி சொல்லித்தர்றதுனு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்க முடிவு பண்ணிருக்காங்கவே…! என்றார் மீரான்.

என்னண்ணா…! ஏதோ புது திட்டத்தை கையில எடுத்துருக்காரு போலண்ணா..? என்று கேட்டார் டேவிட். யாருப்பா..! என்று கேட்டார் கபாலி. ஒண்ணுமில்லண்ணா…! கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டுல நாம் தமிழர் தங்களோட வாக்கு வங்கியை அதிகரிச்சுகிட்டே வர்றாங்கண்ணா..! ஆனா.. இந்த ரஜினி, கமலோட அரசியல் வருகை தனக்கு பாதிப்பை ஏற்படுத்திடுமோனு சீமான் ரொம்பவே வருத்தப்பட்றாருண்ணா…!

இதுக்காக, திரைத்துறையினரை தன்பக்கம் இழுக்க அவர் முயற்சிகள் பண்ணிகிட்டே வர்றாருண்ணா…! அவரோட முயற்சிகளுக்கு பலனா… ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்துல பாரதிராஜா உள்ளிட்டோர் சீமானுக்கு ஆதரவா இருந்தாங்கண்ணா…! இருந்தாலும்.. இன்னும் கட்சியை பலப்படுத்த வேண்டியதை சீமான் உணர்ந்துருக்காருண்ணா..! அதுனால… சமூக ஆர்வலர்களையும் தன்பக்கம் இழுக்க அவர் திட்டம் போட்டுருக்காருண்ணா…! இவ்வாறு தமிழ் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களையும் தன்பக்கம் இழுத்து.. அடுத்த சட்டசபை தேர்தல்ல தன்னோட வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவே அவர் திட்டம் போட்டுருக்காருண்ணா..! பொறுத்திருந்து பாப்போம்.. அவர் திட்டம் பலிக்குதானு…! என்றார் டேவிட். டேவிட்டின் இந்த பேச்சுடன் இன்றைய பிரஸ்கிளப் கூட்டத்தை முடித்துக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Leave a Reply