தற்போதைய செய்திகள்
rahul-gandhi-in-shillong-pti_650x400_41517422020

‘பிரதமர் மோடியும் ஊழல்வாதிதான்’ காங்கிரஸ் மாநாட்டில் பா.ஜனதாவை கடுமையாக சாடிய ராகுல் காந்தி…….

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பா .ஜனதாவை கடுமையாக சாடிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியும் ஊழல்வாதிதான் என்றார்.

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

கடும் தாக்கு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மாலை மாநாட்டில் நிறைவுரை ஆற்றினார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 50 நிமிடங்கள் மிகவும் உணர்ச்சிகரமாக ராகுல் பேசினார்
ரபேல் போர் விமான ஒப்பந்தம், பிஎன்பி மோசடி, பொருளாதார நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பிற விவகாரங்களில் ஆளும் பாரதீய ஜனதாவை அப்போது அவர் கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது-

கவுரவர்கள்

‘‘மகாபாரதத்தில் கவுரவர்களை போன்று அதிகாரத்திற்காக பா.ஜனதா வடிவமைக்கப்பட்டு உள்ளது. கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை பா.ஜனதா தலைவராக ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் காங்கிரஸில் இதுபோன்ற ஒருநகர்வை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்தியா, ஒருபோதும் எங்களை பா.ஜனதா போன்று நடக்க செய்யாது. பாரதிய ஜனதா ஒரு அமைப்பின் குரலாகவே இருக்கும், காங்கிரஸ் ஒரு தேசத்தின் குரலாக இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ்.

பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவிற்காக போராடிய இஸ்லாமியர்களை இந்தியர்கள் கிடையாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறுகிறார்கள். அவர்கள் தமிழர்களை அழகிய தமிழ் மொழியில் இருந்து மாறுமாறு வற்புறுத்துகிறார்கள்.

வடகிழக்கு மாநில மக்களிடம் நீங்கள் சாப்பிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள், பெண்கள் ஒழுங்காக உடையணிய வேண்டும் என்கிறார்கள்.

காங்கிரசில் தடுப்புச்சுவர்

காங்கிரஸ் தேசத்தின் பலமாகும். காங்கிரஸ் அரசால் மட்டுமே வேலைவாய்ப்பை வழங்க முடியும். அதற்காக காங்கிரஸ் கட்சி மாற வேண்டும். இதனை உங்களில் சிலர் விரும்ப மாட்டீர்கள். ஆனால் இந்த இயக்கம் மாற வேண்டும்.

நம்மிடம் அதிகமான ஆற்றல் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அடிப்படை தொண்டர்கள் மற்றும் கட்சியின் தலைவர்கள் மத்தியில் தடுப்பு சுவர் உள்ளது. அந்த சுவரை உடைக்க வேண்டும் என்பதே முதல் பணியாகும். அதனை அன்புடன் உடைக்க முதல்கட்டமாக கட்சியின் தலைவர்களுடன் பேச வேண்டும்.

வங்கிக்கொள்ளை
நீங்கள் வசதியானவர் என்றால் வங்கியில் இருந்து ரூ. 30 ஆயிரம் கோடியை கொள்ளையடிக்க முடியும். பாரதிய ஜனதா அரசு வங்கியில் கொள்ளையடிப்பவர்களை பாதுகாக்கும். நிதி அமைச்சர் அமைதியாக இருப்பார், ஏனென்றால் அவரும், அவருடைய மகளும் முதலாளிகளின் நண்பர்கள் ஆவார்கள்.

நீங்கள் ஏழையாக இருந்தால் உங்களுக்கு எந்தஒரு வழியும் கிடையாது. நீங்கள் விவசாயியாக இருக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளராக இருக்க வேண்டும் அல்லது வேலையில்லாதவராக இருக்கவேண்டும்.

மோடியும் ஊழல்வாதிதான்

மோடி ஊழலுக்கு எதிராக போராடவில்லை

பிரதமர் மோடி ஊழலுக்கு எதிராக போராடவில்லை, அவரும் ஊழல்வாதிதான் (ரபேல் போர் விமான விவகாரம்). ஒரு விமானம் வாங்க நாங்கள் ரூ. 570 கோடி வழங்கினோம். பிரதமர் மோடி அதே விமானத்திற்கு ரூ. 1670 கோடி வழங்கி உள்ளார்.

பிரதமர் மோடி ரூ. 1,100 கோடியை அதிகமாக வழங்கி உள்ளார்.
ரபேல் போர் விமானங்கள் வாங்கும் விவகாரத்தில் ஒப்பந்தத்தை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் மாற்றிவிட்டார். நாங்கள் 126 விமானங்கள் வாங்க பேச்சுவார்த்தை நடத்திய தொகையில் இப்போது 36 விமானங்கள் வாங்கப்படுகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
Leave a Reply