BREAKING NEWS

பிரதமர் மோடியுடன் ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியா வந்துள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி மற்றும் பாதுகாப்பு அமைச்சா் தாரோ கோனோ ஆகியோா் பிரதமர் நரேந்திர மோடியை தலைநகர் டெல்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருநாட்டு பிரச்சினைகள் உள்பட சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது.

இந்தியா-ஜப்பான் நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்களிடையேயான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே கடல்சாா் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இதில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் தாரோ கோனோ ஆகியோா் பங்கேற்றனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *