BREAKING NEWS

பிரச்சினைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்ககூடாது, கமல்ஹாசன் வலியுறுத்தல்.

பிரச்சினைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்ககூடாது, கமல்ஹாசன் வலியுறுத்தல்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிரொலி:
சென்னை, மே 22-

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, பிரச்சினைகளுக்கு ரத்தத்தினால் முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

10 பேர் பலி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, நேற்று அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

ரத்தத்தினால் முற்றுப்புள்ளி

மக்கள் வாழும் பகுதியை மாசுபடுத்திக்கொண்டு இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். மேலிடத்தில் இருந்து உத்தரவு வராமல் இத்தகைய துப்பாக்கிச்சூடு நடக்க வாய்ப்பு இல்லை. இந்த சம்பவத்திற்கு அதிகாரிகளை மட்டுமே பழிவாங்கிவிட கூடாது. மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? என்பதே தமிழகத்தின் கேள்வி.

அரசு வன்முறையும் கண்டிக்கத்தக்கதே. பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply