BREAKING NEWS

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.

 

சர்வாதிகாரி

பிக் பாஸ்-2 நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. 6 வாரங்களைக் கடந்து செல்லும் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூட்டுவதற்காக சர்வாதிகாரி என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பெண் சர்வாதிகாரியாக ஐஸ்வர்யா தனது டாஸ்க்கை ஆரம்பித்தது முதல் தன்னுள் இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த கோபத்தை டாஸ்க் என்ற பெயரில் சக போட்டியாளர்கள் மீது காண்பித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் லூயிசால் ரமேஷ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதும் கமல் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் கூறியிருப்பதாவது:

டாஸ்க்

”விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் வாரந்தோறும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக கொச்சைப்படுத்தி வருகிறார். தற்போது இவருடைய ஏற்பாட்டில் சர்வாதிகாரி என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஐஸ்வர்யா என்பவர் பெண் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் பொதுமக்களைக் கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களைச் செய்கிறார். இந்த டாஸ்க்கில் என்னென்ன பேச வேண்டும், செய்ய வேண்டும் என கமல்ஹாசனும், தனியார் நிறுவனமும் முடிவு செய்கின்றனர்.

அமைதிப் பூங்கா

அதன்படிதான் அவர்கள் பேசுகின்றனர் நடிக்கின்றனர். இதில் ரித்விகா என்பவர் பேசும்போது ஐஸ்வர்யா வட மாநிலப் பெண் அவருக்கு தமிழ்நாட்டில் சர்வாதிகாரி ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாது என்று பேசுகிறார்.

தமிழகத்தில் அமைதிப் பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அவதூறாக சர்வாதிகாரி போல் சித்தரிக்கும் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிறுவனம் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.




Leave a Reply