BREAKING NEWS

பிகில் – கைதி – அசுரன் பட ‘ரீ மேக்’குக்கு கடும் போட்டி

சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தனுஷின் ‘அசுரன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து தீபாவளிக்கு வெளிவந்த, கார்த்தியின் ‘கைதி’, விஜய்யின் பிகில்’ படங்களும் வெற்றியை தழுவி இருக்கிறது.
இதனால் இந்த 3 படங்களையும் ‘‘ரீ மேக்‘‘ செய்ய இப்போது கடும் போட்டி நிலவுகிறது.
குறிப்பாக அசுரன் படத்தை சமீபத்தில் பார்த்த இந்தி நடிகர் ஷாருக்கான், அதை தானே இந்தியில் ரீமேக் செய்யவும், தனுஷ் கேரக்டரில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதேப்போன்று தெலுங்கில் தாணுவும், தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவும் இணைந்து அசுரனை தயாரிக்கிறார்கள். தனுஷ் கேரக்டரில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார்.
‘கைதி‘ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ஜூனியர் என்.டி.ஆரும், இந்தியில் ரீமேக் செய்ய அக்ஷய் குமாரும் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
பிகில்’ ஹிந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே இந்தியிலும் தயாரிக்கிறது.விஜய் வேடத்தில் நடிக்க ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *