BREAKING NEWS

பா.ம.க. நிறுவனர் ராமதாசை, முதல்வர் எடப்பாடி பழனிசாாமி நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்

சென்னையில் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பா.ம.க. நிறுவனர் ராமதாசை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ேநரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

உடல்நலம் விசாரிப்பு தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது பா.ம.க. இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, கிரிம்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

மேலும், மருத்துவர்களிடமும் அவரது உடல்நலமும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டார். மேலும், அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. ஆர்.கே.பாரதிமோகன், வாகன விபத்துக்குள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் பயிற்சி மாணவர் மகேஸ்வரன் ஆகியோரையும் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்களும், அதிகாரிகளும் உடனிருந்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *