BREAKING NEWS

பார்த்திபன் படத்தில் காட்சிகள் நீக்கம்

நடிகர் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து வெளிவந்திருக்கும் படம், ‘‘ஒத்த செருப்பு சைஸ் 7 ‘.படத்தின் திரைக்கதை,‘ எழுதி இயக்கி, அவரே தயாரித்துள்ளார்.இப்படத்தில் இருந்து சில காட்சிகளை பார்த்திபன் இப்போது நீக்கி இருக்கிறார். நீக்கப்பட்ட காட்சி எது என்பது பற்றி அவர் கூறி இருப்பதாவது:-
ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நாயகன் மாசிலாமணியிடம் போலீஸார் மேற்கொள்ளும் விசாரணையின் அடிப்படையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் நீளம் கருதி சில காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. இவை படத்தின் விறுவிறுப்பை குறைக்கும் என்பதால் அவை நீக்கப்பட்டன. அதில் மாசிலாமணியை விசாரணை செய்யும் அதிகாரி ஒரு செய்தித்தாளை கொண்டுவந்து தூக்கிப்போட்டு, ‘‘ச்சே இவ்வளவு கேவலமான வேலைய செய்றதுக்கா இந்த யூனிஃபார்ம்‘‘ என்று எரிச்சலுடன் சொல்கிறார்.
அதற்கு பெண் போலீஸ், ‘‘சார் பேப்பர் ஈரமாயிடிச்சி‘‘ என்கிறார். பதிலுக்கு விசாரணை அதிகாரி, ‘‘அது ஹைகோர்ட் ஜட்ஜ் காரி துப்புனதும்மா,‘‘ என்கிறார். அதோடு, ‘‘அரசியல்வாதிகளுக்கு காவல் துறை அதிகாரிகள் எல்லாம் கைகூலியா செயல்படுறாங்களாம்.
அதுக்கு தான் ஜட்ஜ் கண்டனம் தெரிவிச்சிருக்காரு‘‘, என்கிறார். அப்புறம் காவல் துறை பொறுப்புடன் செயல்படணுமாம். எப்படி செயல்பட்றது, விட்டாத்தானே செயல்பட முடியும், என்று மேலும் காட்சி நீள்கிறது.
மேற்கண்ட காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது‘
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *