BREAKING NEWS

பாரம்பரிய வேட்டை முறைகள், நடனங்களை கொண்டாடும் திருவிழா கிர்கிஸ்தானில்

கிர்கிஸ்தான் நாட்டில் பாரம்பரிய வேட்டை முறைகள் மற்றும் பாரம்பரிய நடனம் ஆகியவற்றை கொண்டாடும் சால்புரன் திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கிர்கிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள இசிக் குல் ஏரி அருகே ஆண்டு தோறும் சால்புரன் என்ற பெயரில் திருவிழா நடைபெறும். வில் அம்புகள், கழுகுகள், வேட்டை நாய்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வேட்டையாடியதை நினைவு கூறும் வகையில், அதன் அடிப்படையில் அமைந்த போட்டிகள் இந்த திருவிழாவில் நடத்தப்படுகின்றன. மேலும் பாரம்பரிய நடனங்களும் அரங்கேற்றப்படுகின்றன.

இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கிய திருவிழாவில் நடத்தப்பட்ட, வில்வித்தை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் தங்கள் எஜமானர்களுடன் இணைந்து கழுகுகளும், வேட்டை நாய்களும் இறைகளை பிடித்ததை பார்வையாளர்கள் கண்டு களித்தனர். முன்னதாக நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.




Leave a Reply