தற்போதைய செய்திகள்

பாம்பன் துறைமுகத்தில் 2-வது நாளாக-3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை…

ராமேஸ்வரம்,
பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 2-வது நாளாக ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் புயல் சின்னம் உருவாகி இருப்பதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
இதனால் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு கடந்த 2 நாளாக ஏற்றப்பட்டுள்ளது.
3 ஆயிரம் படகுகள்
புயல் அபாயத்தால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டினம், புதுமடம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்தாண்டு மீன்பிடி தடை காலம் நீக்கத்திற்கு பிறகு மே 29-ல் கடலுக்குச் சென்ற படகுகள் இயற்கை சீற்றம், இலங்கை கடற்படை தாக்குதல், தொழில் நசிவு உள்ளிட்ட காரணங்களால் தொழில் அடிக்கடி தடைபட்டது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இந்த நிலையில் நடப்பாண்டு மீன்பிடி தடைக்காலம் தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில்
கடந்த ஒரு வாரமாக படகுகள் கடலுக்குச் செல்லாததால் மீவவர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதித்துள்ளது.
இதனால் நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Leave a Reply