BREAKING NEWS

‘பாசமலர்’ அண்ணனாக வாழ்ந்திருக்கிறேன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து ‘‘நம்ம வீட்டுப்பிள்ளை‘‘ என்ற படம் வெளிவருகிறது. இயக்குனர் பாண்டிய ராஜ் டைரக்டு செய்திருக்கிறார். இப்படம் வெளிவருவதையொட்டி சிவகார்த்திகேயன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய என் இயக்குனர் பாண்டியராஜ் சார் இயக்கத்தில் மீண்டும் நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
அதை விட அவர் எனக்காக கொடுத்திருக்கும் அற்புதமான கதை. ‘நம்ம வீட்டுப்பிள்ளை‘‘ படம் அண்ணன் – தங்கை பாசம் பற்றிய கதை. அண்ணனாக நான் நடிக்க தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருக்கிறார். எனக்கு அப்பாவாக சமுத்திரக்கனி அண்ணனும் தாத்தாவாக பாராதிராஜா சாரும் நடித்து இருக்கிறார்கள். அண்ணன் தங்கை கதை என்றால் முதலில் நினைவுக்கு வருவது நடிகர் திலகம் நடித்த ‘‘பாசமலர்‘‘ படம் தான். ரஜினி சார் நடித்த முள்ளும் மலரும், அஜித் சார் நடித்த வேதாளம், விஜய் சார் நடித்த திருப்பாச்சி என சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வரிசையில் தான் இப்படமும் இருக்கும். ஏகப்பட்ட நடிகர் நடிகைகள். எங்களுக்குள் போட்டி பொறாமை எதுவும் இல்லை..எல்லோரும் ஒரே குடும்பம் போல் இருந்தோம்.
அப்படி ஒரு வாய்ப்பு இனி கிடைக்குமா என தெரியவில்லை.
ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு நானும் பாசமலர் அண்ணாக படத்தில் வாழ்ந்திருக்கிறேன். படத்தில் தங்கையாக நடித்த ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொடுக்கும் போது நிஜ வாழ்க்கையில் என் அக்காவுக்கு திருமணம் முடிச்சி அனுப்பியது நினைவுக்கு வந்து கண்கலங்கி விட்டேன். இதுவரை என்னை ஜாலியான பையனாக பார்த்தவர்கள் இப்படம் வெளிவந்ததும் அண்ணனாக பார்ப்பார்கள்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *