BREAKING NEWS

பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

விருதுநகர் மாவட்டம், சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரைமுதலமைச்சர் உத்தரவின்பேரில், மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் மலர்தூவி திறந்து வைத்தார்.முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சாஸ்தாகோவில் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் மலர் தூவி திறந்து வைத்து தெரிவித்ததாவது, வேளாண் பெருமக்களின் கோரிக்கைகளை ஏற்று, இராஜபாளையம் வட்டம், சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து நவம்பர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில், சாஸ்தாகோவில் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கண்மாய் பாசனம் மூலம் 2679.10 ஏக்கர் நிலங்கள் மற்றும் நேரடிப்பாசனம் மூலம் 451.58 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 3130.68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், கோட்டாட்சியர்(சாத்தூர்) காளிமுத்து, ராஜபாளையம் வட்டாட்சியர் ஆனந்தராஜ், மண்டல துணை வட்டாட்சியர் காளிராஜன், மேல்வைப்பாறு வடிநில உபகோட்டம் (இராஜபாளையம்) உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வி, உதவிபொறியாளர்கள் புனிதலட்சுமி, ஜான்சி அனிதா, சந்திரமோகன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.படம்விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் மலர்தூவி திறந்து வைத்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *