BREAKING NEWS

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் வீடுகள், சாலைகள் சேதம் – டெல்லியிலும் உணரப்பட்டது

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் நில நடுக்கம் ஏற்பட்டு சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. பாலங்கள் சேதமடைந்துள்ளன. இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லியிலும், வட இந்தியப் பகுதிகளிலும் உணரப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.31 மணிக்கு இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் 6.3 அளவிலான நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பஞ்சாப் மற்றும் சண்டிகரிலும் அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜாட்லான் என்ற இடத்தில் இரண்டு பாலங்கள் இதில் சேதமடைந்துள்ளன.

கோரிசான், ஜாட்லான், பிம்பர் ஆகிய பகுதிகளில் பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாக பிபிசி செய்தியாளருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மிர்பூருக்கு செல்லும் சாலை பல இடங்களில் பிளந்துள்ளது. மிர்பூரில் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *