தற்போதைய செய்திகள்
The Governor of Meghalaya,  Banwarilal Purohit callls on the Prime Minister  Narendra Modi in New Delhi on Friday  and briefed him about the flood situation in North East.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு……..

புதுடெல்லி,

காவிரி பிரச்சினையில் தமிழகம் கொந்தளிப்பாக உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

போராட்ட களம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சுங்கச்சாவடி சூறை

தஞ்சை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியை எரித்து, அந்த படத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த மாட்டோம் என்று கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் வன்முறை வெடித்தது.

சட்டம்-ஒழுங்கு

நேற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினார்கள். ஆளும் கட்சியான அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடையடைப்பு போராட்டத்தை நடத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மத்திய உள்துறை இலாகாவுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

அவசர அழைப்பு

பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில், டெல்லி வருமாறு அவருக்கு உள்துறை இலாகா அவசர அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் பரவியது.

இதைத்தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

மோடியுடன் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை 11.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதற்காக நாடாளுமன்றத்துக்கு தமிழக ஆளுநர் வருகை தந்தார்.

அங்கு பிரதமர் அலுவலகத்தில் அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கினார்.

தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் பன்வாரிலால் சந்தித்துப் பேசிவிட்டு நேற்று மாலை சென்னை திரும்பினார்.
Leave a Reply