BREAKING NEWS

பசிபிக் பெருங்கடல் அலையில் மிதவையுடன் தத்தளித்த 3 பேர் மீட்பு

நியூ கலிடோனியா பகுதி பசிபிக் பெருங்கடலில், கடல் அலையில் சிக்கி மிதவையுடன் தத்தளித்து கொண்டிருந்த 3 பேரை சுற்றுலா கப்பல் மீட்டுள்ளது.

நியூ கலிடோனியா நாட்டின் பசிபிக் கடல் பரப்பில் 3 பேர் படகில் பயணித்த போது, கொந்தளித்த கடலில் படகு மூழ்கியது இருப்பினும் அதில் இருந்த மூன்று பேர் மிதவை ஒன்றில் உயிர்தப்பினர்.

இந்நிலையில் மிதவையுடன் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அவர்கள், உதவிக்கேட்டு நொவுமியா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, 3 பேர் கடலில் தத்தளிப்பது குறித்து நியூ கலிடோனியா கடல் வழியாக 2,000 பயணிகளுடன் பிரிஸ்பேன் நோக்கி சென்ற சுற்றுலா படகுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்அடிப்படையில் மிதவை அருகே லாவகமாக ‘பசிபிக் டான்’ என்ற கப்பலை இயக்கி சென்ற கேப்டன், அதிலிருந்த 3 பேரையும் மீட்டு தனது கப்பல் மூலம் கரை சேர்த்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *