BREAKING NEWS

பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி.

இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3 நாள்களாக வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று திடீர் சுணக்கம் கண்டது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததையடுத்து இந்த சரிவு ஏற்பட்டது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கின் பங்கின் விலை 2.87% சரிந்தது. மஹிந்திரா & மஹிந்திரா லாபம் 50% அதிகரித்ததையடுத்து அந்நிறுவனப் பங்கின் விலை 2.26 சதவீதம் உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 216 புள்ளிகள் சரிந்து 34,949 புள்ளிகளில் நிலைத்தது. நிப்டி 55 புள்ளிகள் குறைந்து 10,633 புள்ளிகளில் நிலைத்தது.

——




Leave a Reply