BREAKING NEWS

நைஜீரியாவில் வன்முறை: 200 பேர் பலி

 

 

நைஜீரியாவின் வடமேற்கு, தென் கிழக்கு பகுதிகளில் கால் நடை வளர்ப்பு சமூகத்துக்கும், வேளாண் சமூகத்துக்கும் கடந்த சில மாதங்களாக வன்முறை நடந்து வருகிறது. இதில் இந்த ஆண்டின் ஜனவரியிலிருந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதல்கள் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், இந்த வன்முறை சம்பவங்கள் நைஜீரிய அரசை மிகுந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது.

இதுகுறுத்து பிளாட்டோ மாகாணத்தின் ஆளுநர் கூறும்போது, “கடந்த வாரத்தில் விவசாய குழுக்களிடம் ஏற்பட்ட மோதலில் 200 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினார்.

 




Leave a Reply