BREAKING NEWS

நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் டீசல், பெட்ரோல்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு பெட்ரோல், டீசல் கடத்தப்பட்டு பீகார் எல்லையில் விற்கப்படுகிறது.

விலை உயர்வு

நாட்டில் 17 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. முடிவே இல்லாமல் உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ தொட்டாலும் ஆச்சரியம் இல்லை. இதனால் சாமானிய மக்கள் மிகக் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வார் காய்கிறிகள் விலைகளும் உயர்ந்து உள்ளது. அத்தியவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைவாக விற்பனை செய்யப்படும் நேபாளத்தில் இருந்து எல்லை மாநிலங்களுக்கு கடத்தி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடத்தல்

நேபாளத்தில் பெட்ரோல் ரூ.65 டீசல் 55-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பெட்ரோல், டீசல் பீகார், மேற்கு வங்க எல்லைகளில் நேபாள் விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எல்லைகளில் கனஜோராக இந்த விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் நேபாள எல்லைகளுக்குள் சென்றும் பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்புவதற்காக காத்திருக்கும் காட்சிகளும் அரங்கேறுகின்றன.




Leave a Reply