BREAKING NEWS

நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: புதிய மருத்துவ தரவரிசைப் பட்டியலை வெளியிட ஆவண செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்.

 

 

கூடுதல் மதிப்பெண்

இந்த ஆண்டு `நீட்’ தேர்வை தமிழக மாணவர்கள், ஒரு லட்சத்து 14,602 பேர் எழுதினர். இதில், தமிழில் தேர்வு எழுதியவர்கள் 24,720 பேர். இதில், 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. இதனால், அந்த வினாக்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும், இரண்டு வாரங்களுக்குள் புதிய தர வரிசைப் பட்டியலை சி.பி.எஸ்.இ. வெளியிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய தரவரிசை

தற்போது நீதிமன்றத் தீர்ப்பின்படி, புதிய மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெற வேண்டும். ஆனால், சி.பி.எஸ்.இ. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்கிறது. இதன்மூலம் சி.பி.எஸ்.இ. தவறு செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சி.பி.எஸ்.இ.யின் இந்த அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய மதிப்பெண் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட வைத்து, அதன் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெற தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply