தற்போதைய செய்திகள்

நீதிமன்ற தடையை மீறி சசிகலா புஷ்பா ராமசாமியை மறுமணம் செய்தார் டெல்லி சொகுசு ஓட்டலில் நடந்தது….

புதுடெல்லி,

மதுரை குடும்ப நல நீதிமன்றத்தின் தடையை மீறி டெல்லி சொகுசு ஓட்டலில் வேத மந்திரங்கள் முழங்க ராமசாமியை மறுமணம் செய்து கொண்டார் ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா.

சசிகலா புஷ்பா

அ.தி.மு.க.வில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சசிகலா புஷ்பா எம்.பி., தி.மு.க எம்.பி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் அடித்தார். ஜெயலலிதாவால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என ராஜ்யசபாவில் கண்ணீர் மல்க கூறினார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்து அவரது முதல் கணவர் லிங்கேஸ்வரன் திலகன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்த போது அ.தி.மு.க தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டது, டி.டி.வி தினகரனை சந்தித்து ஆதரவு அளித்தது என்று இன்று வரை தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தார் சசிகலா புஷ்பா.
திருமண அழைப்பு
இந்தநிலையில் தனக்காக அடிவாங்கி ரத்தக்களறியான முதல் கணவர் லிங்கேஸ்வர திலகனை விவாகரத்து செய்தார் சசிகலா புஷ்பா பிறகு ராமசாமி என்பவரை 2-வது திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின. இருவரின் பெயர் போட்ட திருமண பத்திரிகை புகைப்படம் சமூக வலைதளங்களில் வளம் வந்தது. ஆனால் இதுகுறித்து சசிகலா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ராமசாமி வழக்கறிஞர் எனவும் ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எனவும் செய்திகள் வெளியானது. மேலும் அவர் நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ராமசாமியன் முதல் மனைவி சத்யபிரியா கணவரின் 2-வது திருமணம் குறித்த தகவல் தெரிந்து அதிர்ச்சியடைந்தார். கண்ணீருடன் கணவருடன் பேசிய போது அவருக்கும் வாட்ஸ் ஆப்பில் திருமண அழைப்பிதழை அனுப்பினார் ராமசாமி.

நீதிமன்றம் தடை

திருமண ஏற்பாடுகள் உச்ச நிலையில் இருப்பதை அறிந்து வேதனை அடைந்த சத்யபிரியா இந்த திருமணத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சசிகலா புஷ்பாவிடம் இருந்து தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் எனவும் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சசிகலா புஷ்பாவை மட்டுமின்றி எந்த பெண்ணையும் ராமசாமி இந்த வழக்கு முடியும் வரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமிக்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாமல் டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் நேற்று சசிகலா புஷ்பாவும், ராமசாமியும் திருமணம் செய்துகொண்டனர். திருமண கட்சிகளின் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.

வேத மந்திரம் முழங்க

சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணம் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் பாரம்பரிய முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. ராமசாமியின் கரம் பற்றி 3 முறை மணமேடையை வலம் வந்தார் சசிகலா புஷ்பா. நீதிமன்றம் தடை விதித்த நிலையிலும் திட்டமிட்டபடி ராமசாமியின் கரம் பிடித்துள்ளார் சசிகலா புஷ்பா. நீதிமன்ற உத்தரவை மீறியும், மனைவி சத்யப்ரியாவிடம் விவாகரத்து பெறாமலும் ராமசாமி சச்சிகலா புஷ்பாவை மணந்தது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.
Leave a Reply