BREAKING NEWS

“நீட் ” தேர்வு மே. 3-ந்தேதி நடக்கிறது 2019-2020ம் கல்வி ஆண்டுக்கான

2019-2020ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.

மே 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4-ல் வெளியிடப்படும். 2019-2020ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டு உள்ளது. மேலும் வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவி்க்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இயற்பியல், வேதியியல், உயிரியியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியல், ஆங்கிலம் ஆகியவற்றை ஒரு பாடமாக எடுத்து 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நடப்பாண்டில் பிளஸ்-2 தேர்வெழுத விண்ணப்பித்தவர்களும் நீட் தேர்வெழுத தகுதியுடையவர்கள் ஆவர்.

தனித்தேர்வர்கள் மற்றும் திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்கள் நீட் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த தேர்வில் நாடு முழுவதும் 14.10 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். அதில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 042 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 078 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் 59 ஆயிரத்து 785 பேர், அதாவது 48.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.




Leave a Reply