BREAKING NEWS

நீட் தேர்வு முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

நீட் தேர்வு முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நீட் ஆள்மாறாட்டம் புகார்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அடிப்படையில் கேரள இடைத் தரகர் ஜார்ஜ் ஜோசப் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மானவர் பிரவீனும் அவரது தந்தை சரவணனும் கைது செய்யப்பட்டனர். அதேபோல் காட்டான்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவர், அவரது தந்தை டேவிட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரியில் முகமது இர்ஃபான் என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில், மாணவர் இர்ஃபான் சேலம் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை அக்டோபர் 9ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர் விசாரணை

இந்நிலையில் அமைச்சர் கே.பி அன்பழகன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும் நிலையில் அதனையும் தாண்டி நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை தொடர்பான பாடப்பிரிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 12 பாடப்பிரிவுகளை தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரைத்திருப்பதாகத் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *