BREAKING NEWS

நீட்டில் முதலிடம் பெற்ற மாணவி ஜிப்மர் தேர்வில் 33-வது இடம்,   தமிழக மாணவி 5-வது இடம்.

நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகாரின் கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33-வது இடம் பெற்றுள்ளார். நீட் தேர்வில் இந்திய அளவில் 12-வது இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனா ஜிப்மரில் 5-வது இடம் பிடித்துள்ளார்.

பாராட்டு

நீட் தேர்வில் பீகாரை சேர்ந்த மாணவி கல்பனா குமாரி 720-க்கு 691 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். கல்வி மற்றும் போட்டி தேர்வுகளில் பின்தங்கிய மாநிலமான பீகாரில் இருந்து மாணவி ஒருவர் முதலிடம் பிடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கல்பனா குமாரிக்கு பல்வேறு நிலைகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

அதுபோல் சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா தமிழகத்தில் முதல் இடமும், அகில இந்திய அளவில் 12-வது இடமும் பிடித்து சாதனை படைத்தார். அவர் 720-க்கு 676 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

5-வது இடம்

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த புதுச்சேரி ஜிப்மர் தேர்வில் நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகாரின் கல்பனா குமாரி 33 வது இடம் பிடித்து உள்ளார். நீட் தேர்வில் இந்திய அளவில் 12-வது இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனா ஜிப்மரில் 5-வது இடம் பிடித்துள்ளார்.




Leave a Reply