BREAKING NEWS

நிலுவை ஊதியத்தை வலியுறுத்தி நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.


நிலுவையிலுள்ள 16 மாதகால ஊதியத்தினை தர வலியுறுத்தி நியாய விலைக்கடை ஊழியர்கள் குடிமைப்பொருள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலுவை ஊதியம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பகுதிகளில் பணிபுரிந்து வரும் 600 நியாய விலைக்கடை ஊழியர்கள் 16 மாதகால ஊதியத்தினை தர வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். நிலுவை ஊதியம் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் துறை அமைச்சர் கந்தசாமியுடன் ஊழியர்கள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது அவர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்க மறுத்தனர்.

இதனையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனரும், கூட்டுறவுத்துறை இயக்குனரும் கடந்த 15ந் தேதிக்குள் சம்பளம் தருவதாக எழுதி கையொப்பம் போட்டு கொடுத்தனர். அதன் பின்னரே போராட்டத்தை கைவிட்டு பணிக்குச்சென்று இலவச அரிசியை வழங்கினர்.

தொடர் போராட்டம்

ஆனால் 15ந் தேதி சம்பளம் வழங்கப்படவில்லை. 2 நாட்கள் காத்திருந்தனர். அப்போதும் சம்பளம் கிடைக்காதாதல் கடந்த 18ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையடுத்து, 9ம் நாளாக நேற்று தட்டாஞ்சாவடியிலுள்ள தலைமை குடிமை பொருள் நுகர்வோர் அலுவலகத்தை 100 க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




Leave a Reply