BREAKING NEWS

நிலவின் 3-வது சுற்றுவட்டப் பாதையை அடைந்தது, சந்திரயான்2

சந்திரயான் 2 விண்கலம் நிலவின் 3வது சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் ஐஐஐ ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் 2 விண்கலமானது, கடந்த புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 14) பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் தொடங்கியது.

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்ட் 20ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. அதன்பின் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திராயன் 2, நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.

இந்தநிலையில் நிலவின் 3-வது சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2 விண்கலம் நேற்று நுழைந்தது. அந்த பாதையில் விண்கலம் சரியான முறையில் பயணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் பயணத்திட்டத்துக்கு செயல்பாடுகள் அமைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆகஸ்ட் 30-ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் இறுதி மாற்றத்தை அடையும். இறுதியாக செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும்.




Leave a Reply