BREAKING NEWS

‘நாய்’ என திட்டிய விவகாரம் – மன்னிப்பு கேட்ட நடிகை

கமல் நடத்தும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில்,கலந்து கொண்டு இருக்கும் நடிகைகளில் சாக்‌ஷியும் ஒருவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா, ஷெரின் இடையே கடுமையான சண்டை நடந்தது. இதனால் மனமுடைந்து போன ஷெரின் தேம்பி தேம்பி அழுதார். பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த சாக்‌ஷி , அவருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது சாக்‌ஷி ‘‘ நாய் குரைப்பதற்காக நீ ஏன் கவலைப்பட வேண்டும் ‘‘என ஷெரினிடம் கூறினார். இது ரசிகர்களை பார்த்து சாக்‌ஷி ‘‘நாய்‘‘ என கூறுவதாக புரிந்துகொள்ளப்பட்டது. இதனால் பிக்பாஸ் பார்வையாளர்கள் சாக்‌ஷி மீது கடும் கோபமடைந்தார். இதுகுறித்து கமல் முன்னிலையில் விளக்கம் அளித்த சாக்‌ஷி , தான் அந்த அர்த்தத்தில் அப்படி பேசவில்லை என்றார்.
இந்நிலையில் தனது சமூக வலைதளம் வாயிலாக சாக்ஷி மன்னிப்பு கோரியுள்ளார். “அனைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும்… எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.




Leave a Reply