BREAKING NEWS

நான் ஹீரோ இல்லை : யோகிபாபு

நடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் யோகிபாபு ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது.
மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும் யோகிபாபு மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:-
“தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன்.
ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதில் துளியும் உண்மை இல்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.இவ்வாறு யோகி பாபு கூறி இருக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *