BREAKING NEWS

நாடு முழுவதும், காவல் நிலையங்களில் அமித் ஷா மீது, காங்கிரஸ் மாணவர் அமைப்பு புகார்.

 

நாடு முழுவதும் காவல் நிலையங்களில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் புகார் செய்து உள்ளனர்.

அமித் ஷா ஆளுங்கட்சியின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சட்டத்தையே நிர்மூலமாக்கி வருவதாக அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

100 மாவட்டங்களில்

காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான ’நேஷனல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் ஆப் இந்தியா’வைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாட்டின் 28 மாநிலங்களில், 100 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் அமித் ஷாவுக்கு எதிராக நேற்று புகார் அளித்துவருவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றம் தேசிய மாணவர் அமைப்பின் இணைச் செயலாளர் ருச்சி குப்தா தெரிவித்தார்.

நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த மாணவர் அமைப்புடன் ருச்சி குப்தா உடன் வந்திருந்தார்.

அனுமதிக்காது

அப்போது அவர் கூறுகையில், ‘‘அமித் ஷாவின் குற்றத்திற்கு எதிராக குரல் எழுப்புவது தொடரும். இந்த நபருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், இவர் ஆளுங்கட்சியின் தலைவர்.

இவர் சட்டத்தின் ஆட்சியைத் துடைக்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார். இதை காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு அனுமதிக்காது. நாங்கள் இவரது கருத்துக்கு எதிராக நாடு முழுவதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துவருகிறோம்” என்றார் .

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும்போது, குப்தாவும் அவருடன் வந்த மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்களும் பிரதமர் மோடி மற்றும் பாஜக கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

குண்டர்களின் கொலைச் செயல்

இது குறித்து மாணவர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘சட்டவிரோதம் நாட்டை எடுத்துக்கொண்டுவிட்டது. குண்டர்களும், குற்றவாளிகளும் பாஜகவின் பாதுகாப்போடு கொலைச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நேரத்தில், அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவதற்கு நேஷ்னல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் ஆப் இந்தியா போன்ற காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பு மிக மிக முக்கியமானது”

என்று தெரிவித்துள்ளது.




Leave a Reply