BREAKING NEWS

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி? கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி.


 

ஊழலற்ற..

சென்னை விமான நிலையத்தில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

கூட்டணி யாருடன்? நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது? காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார் என டி.டி.வி தினகரன் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், “ஒரு சிக்கலான பிரச்சினை எங்கள் கட்சிக்கு என்னவென்றால், ‘ஊழலற்ற’ என்ற வார்த்தையை தைரியமாக எங்களால் கூற முடியும். எனவே கூட்டணிக்கு நிறைய பேர் கிடைக்க மாட்டார்கள்” என்றார்.

விஸ்வரூபம்-2

பிக்பாஸ் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, அதை உங்களை போலவே, நானும் ஒரு புன் சிரிப்போடு பார்க்கிறேன். இது முதல் கேஸ் இல்லை. இப்படியெல்லாம் நடக்க கூடும் என்ற யூகத்தில் இவர்கள் போட்டுள்ள வழக்கு எனக்கு வியப்பாக உள்ளது என்றார்.

விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு தொடர்பான கேள்விக்கு, இதுபற்றி பேசக்கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு. அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் நான் கோர்ட்டை மதித்து பேச மாட்டேன். விஸ்வரூபம் 2 திட்டமிட்டபடி வெளியாகும். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.




Leave a Reply