தற்போதைய செய்திகள்

நாஞ்சில் சம்பத் விரும்பினால் அ.தி.மு.க.வுக்கு வரவேற்போம் மைத்ரேயன் எம்.பி. தகவல்…..

சென்னை,

தினகரன் அணியில் இருந்து விலகியுள்ள நாஞ்சில் சம்பத் விரும்பினால், அ.தி.மு.க.வுக்கு வரவேற்போம் என்று மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத் விலகல்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவிவகித்து வந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் நாஞ்சில் சம்பத். பின்னர், தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். பின்னர், தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தினகரன் மதுரையில் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை. இதனையடுத்து, நேற்று முன்தினம் தினகரன் கட்சி மட்டுமின்றி, தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்குவதாக நாஞ்சில் சம்பத் திடீரென அறிவித்தார். மேலும், தினகரன் மேலே பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.

அ.தி.மு.க.வுக்கு வரவேற்போம்

இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவார் என்றும், தி.மு.க.வில் இணைய உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மைத்ரேயன் எம்.பி. ேநற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதால் பலனில்லை. நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க.வுக்கு இணைய வேண்டும் என்று விரும்பினால், அவரை வரவேற்போம். இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.
Leave a Reply