BREAKING NEWS

நாங்கள் நினைத்தால் வேறு வழியில் ஆட்சியமைக்க முடியும்

மகாராஷ்டிராவில் நாங்கள் நினைத்தால் வேறு வழியில் ஆட்சி அமைக்க முடியும் என்று, சஞ்சய் ராவுத் கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பதவிக்கு பாஜக – சிவசேனா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சிவசேனா கட்சியை சேர்ந்தவர் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். பாஜகவும், சிவசேனாவும் 50-50 என்ற அடிப்படையிலேயே ஆட்சியமைக்க வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளதாக சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நினைத்தால் வேறு வழியில் ஆட்சியமைக்க முடியும் என்று சஞ்சய் ராவுத் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றன. பாஜ சிவசேனா கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவையில் 50 சதவீத இடம் கேட்டு சிவசேனா முரண்டு பிடிப்பதால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜ, சிவசேனா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ் தாக்கரேயின் நம்பிக்கைக்குரியவருமான சஞ்சய் ராவுத் திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சரத் பவாரை சந்தித்த பிறகு பேட்டியளித்த சஞ்சய் ராவுத், ‘‘சரத் பவாரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

தற்போதைய மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து அவருடன் விவாதித்தேன்’’ என்றார். இந்நிலையில், சிவசேனா எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *