BREAKING NEWS

நடுவானில் விமானத்தில் கோளாறு; 300 பயணிகள் உயிர் தப்பினர்.

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம், எந்திர கோளாறு காரணமாக அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டதால், 300 பயணிகள் உயிர் தப்பினர்.

பயணிகள்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 8 மணிக்கு சவுதி ஏர்லைன்ஸ் விமானம் 300 பயணிகளுடன் ஜெட்டா நோக்கி புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்த விமானத்தில் எந்திர கோளாறு இருந்ததை விமானி கண்டுபிடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் இது குறித்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர் மேலும் விமானத்தை சென்னை விமானத்தை தரையிறுக்க அனுமதி கேட்டார்.

அவசர வழி

இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் விமானத்தை தரையிறக்க அனுமதி அளித்தனர் பின்ான் விமானம் பத்திரமாக தரையிறுக்கப்பட்டது. உடனடியாக பயணிகள் அவசர வழி மூலம் கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்கவைக்கப்பட்டனர். விமானியின் சாதூரியத்தால், உரிய நேரத்தில் விமானம் தரையிறுக்கப்பட்டதால், அதில் இருந்த 300 பயணிகள் உயிர் தப்பினர்.

ஏர் இந்தியா

இதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 130 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் எஞ்சின் பகுதியில் ஏதோ அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த விமானி கட்டுப்பாட்டு அறைக்க தகவல் தெரிவித்தார். விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டும் என்றார் இதனையடுத்து விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பறவை

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது , விமானத்தின் எஞ்சின் பகுதியில் பறவையின் சிறகுகள் இருந்தது. இதனால் எஞ்சினில் சேதம் எற்பட்டு உள்ளது, இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சுமார் 6000 அடி உயரத்தில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது நடைப்பெற்று உள்ளது. எஞ்சின் பகுதியில் இறந்த பறவையை காணவில்லை விமானத்தில் மோதி கீழே விழுந்து இருக்கலாம் என்றனர்.




Leave a Reply