BREAKING NEWS

நடிகைகளின் சம்பளம் பற்றி நடிகை டாப்ஸி

தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமான நடிகை டாப்ஸி இப்போது இந்தியில் நடித்து வருகிறார். அவர் நடித இந்தி படங்கள் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .இதனால் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் சம்பளமும் உயர்ந்துள்ளது.
நடிகைகளின் சம்பளம் பற்றிய கேள்விக்கு நடிகை டாப்ஸி பதில் அளித்துள்ளார். அவர் கூறீ இருப்பதாவது:-
சமீப காலமாக சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கொடுக்கிற சம்பளமும் உயர்ந்து வருகிறது. இது வரவேற்கத்தக்க மாற்றம். இந்தியில் முன்னணி கதாநாயகிகள், இருபது கோடி ரூபாக்கும் மேல் சம்பளம் வாங்குகின்றனர். இதுவே நல்ல மாற்றம் தான்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களிலுமே, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க படுகிறது. இந்த வித்தியாசம் இருக்கிறது.
நான், இரண்டு ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன். சக கதாநாயகிகளோடு என்னை ஒப்பிட்டால், நான் வாங்கும் சம்பளம் குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், எனக்கு பணம் முக்கியம் இல்லை. நல்ல நடிகை என்று நிரூபித்த பின் பணத்தை பற்றி யோசிப்பேன்.
இவ்வாறு டாப்ஸீ கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *