BREAKING NEWS

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘‘பேட்ட’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது

 

 

நடிகர் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பலமொழிகளில் இதுவரை 164 படங்களில் நடித்து இருக்கிறார்.

அவரது 164 வது படமாக டைரக்டர் ஷங்கர் இயக்கியுள்ள ‘‘2.0‘‘ இவ்வாண்டு வர இருக்கிறது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஓர் ஆண்டுக்கும் மேலாக படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது

கார்த்திக் சுப்புராஜ்

இதற்கிடையில் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்,

இப்படத்தை டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘‘இறைவி‘‘ ‘‘ஜிகர்தண்டா‘‘ ‘‘சூது கவ்வும்‘‘ ஆகிய படங்களை டைரக்டு இயக்கியவர்.

இவர் அடுத்து ரஜினியை சந்தித்து ஒரு கதையை சொன்னார். அது ரஜினிக்கு பிடிக்கவே படம் செய்ய சம்மதம் தெரிவித்தார்.

திரிஷா

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க முன்வந்தது. அதை தொடர்ந்து மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்தது. நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிகிறார்.முக்கிய வேடத்தில் பாபி சிம்ஹா நடிக்க நடிகைகள் திரிஷா, சிம்ரன் ஆகியோரும் ரஜினியுடன் நடிக்கிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பு இமயமலை அடிவாரத்தில் உள்ள டார்ஜிலிங்க்கில் நடந்தது.2வது கட்டப்படபிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

பெயர் அறிவிப்பு

படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்ட போதிலும், படத்தின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது

நேற்று மாலை படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. ரஜினியின் அப்படத்துக்கு ‘‘பேட்ட‘‘ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

படத்தின் மோஷன் போஸ்டரும் நேற்று மாலை வெளியானது இப்படத்துக்கு அனிரூத் இசை அமைக்கிறார்….




Leave a Reply