BREAKING NEWS

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் – இந்து மக்கள் கட்சி போலீசில் புகார்.


பிக் பாஸ்-2 நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரத்துக்கு விரோதமாக உள்ளன. எனவே அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து அமைப்பு சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

பிக் பாஸ்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் நடிகர், நடிகைகள் உட்பட 17 பேர் பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லோரும் அமர்ந்து கேட்கக்கூடியதாக இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனிடையே இந்து மக்கள் கட்சி கமல்ஹாசன் மீது போலீசில் புகார் செய்துள்ளது. பிக்பாஸ் 2 -ல் ஒளிபரப்பாகும் காட்சிகள் தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமாக உள்ளன.

ஆபாசம்

தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருப்பதாக கமல்ஹாசன் கூறுகிறார். ஆனால், பிக்பாஸ் 2-ல் காட்டப்படும் காட்சிகள் தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமான து என்று இந்து மக்கள் கட்சி தனது புகார் மனுவில் கூறியுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். எனவே, தமிழ் கலாச்சாரத்திற்கும் இந்து கலாச்சாரத்திற்கும் விரோதமாக உள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

எதிர்ப்பு

இந்த நிகழ்ச்சியை தடை செய்ய கோரி போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற பிக் பாஸ் 1 நிகழ்ச்சியின் போதும் இந்த அமைப்பு புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply