BREAKING NEWS

தொடர்ந்து 6-வது ஆண்டாக வருமான வரி செலுத்தியவர்களில் முதல் இடத்தை பிடித்த தோனி.

 

பீகார்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தியவர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

கேப்டன் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து இரண்டு உலக கோப்பையை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் பீகார்- ஜார்க்கெட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தியவர்களில் தோனி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

2017-18ம் நிதியாண்டில் அவர் ரூ.12 கோடியே 17 லட்சம் கட்டியுள்ளார். இதை பீகார்- ஜார்க்கண்ட் மாநில வருமான வரித்துறை இணை கமி‌ஷனர் நிஷாஒரான் தெரிவித்துள்ளார்.

6-வது ஆண்டாக

கடந்த நிதியாண்டை விட ரூ.1.24 கோடி கூடுதலாக டோனி வருமானவரி கட்டியுள்ளார். 2016-17ல் அவர் ரூ.10 கோடியே 93 லட்சம் வரி செலுத்தி இருந்தார். 2013-14ம் ஆண்டில் இருந்து அதிக வருமான வரி செலுத்துபவராக இருக்கிறார். தொடர்ந்து 6-வது ஆண்டாக அவர் பீகார்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளார்.

பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்டை சேர்ந்த 37 வயதான தோனி போர்பஸ் வெளியிட்ட அதிக வருமானத்தை ஈட்டும் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது




Leave a Reply